Home / ... / Poems / பாரதியார் பாடல்கள் / நல்லதோர் வீணை செய்தேன்

நல்லதோர் வீணை செய்தேன்


நல்லதோர் வீணை செய்தேன் அதை

நலம் கெட புழுதியில் எறிவதுண்டோ?

சொல்லடி சிவ சக்தி எனைச்

சுடர் மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய் ?

"வல்லமை தாராயோ இந்த

மாநிலம் பயனுற வாழ்வதற்கே"

சொல்லடி சிவ சக்தி நிலச்

சுமையென வாழ்ந்திடப் புரிவுகையோ?

தசையினைத் தீசுடினும் சிவ

சக்தியைப் பாடும்நல் அகங்கேட்டேன்

நசையறு மனங்கேட்டேன் நித்தம்

நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்

அசைவறு மதிகேட்டேன் இவை

அருள்வதில் உனக்கெதும்  தடை உள்ளதோ ?









 RSS of this page

Author: bhagyalakshmi   Version: 1.1   Last Edited By: bhagyalakshmi   Modified: 27 Aug 2011