Home / Home / Kuzhandhai Paadalgal / odi vilaiyaadu paapa

odi vilaiyaadu paapa


ஓடி விளையாடு பாப்பா நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா
ஓடி விளையாடு பாப்பா
கூடி விளையாடு பாப்பா கூடி விளையாடு பாப்பா - ஒரு
குழந்தையை வையாதே பாப்பா
ஓடி விளையாடு பாப்பா

பாலைப் பொழிந்து தரும் பாப்பா - அந்த
பசு மிக நல்லதடி பாப்பா
வாலைக் குழைத்து வரும் நாய் தான் - அது
மனிதர்க்குத் தோழனடி பாப்பா

பொய் சொல்லக் கூடாது பாப்பா - என்றும்
புறஞ்சொல்லலாகாது பாப்பா
பொய் சொல்லக் கூடாது பாப்பா
தெய்வம் நமக்குத் துணை பாப்பா
தெய்வம் நமக்குத் துணை பாப்பா - ஒரு
தீங்கு வர மாட்டாது பாப்பா

ஓடி விளையாடு பாப்பா

காலை எழுந்தவுடன் படிப்பு - பின்பு
கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
மாலை முழுதும் விளையாட்டு - என்று
வழக்கப் படுத்திக் கொள்ளு பாப்பா

காலை எழுந்தவுடன் படிப்பு

"அச்சம் தவிர் ஆண்மை தவறேல்
இளைத்தல் இகழ்ச்சி ஈகைத் திறன்
"

பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு

"முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
வருவாய் மயில் மீதினிலே
வடிவேலுடனே வருவாய்
தருவாய் நலமும் தகவும் புகழும்
தவமும் திறமும் தனமும் கனமும்
முருகா முருகா முருகா"

ஜாதிகள் இல்லையடி பாப்பா
ஜாதிகள் இல்லையடி பாப்பா - குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாபம் - பாப்பா
ஜாதிகள் இல்லையடி பாப்பா
நீதி உயர்ந்த மதி கல்வி
நீதி உயர்ந்த மதி கல்வி - அன்பு
நிறைய உடையவர்கள் மேலோர் பாப்பா

ஓடி விளையாடு பாப்பா நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா
ஓடி விளையாடு பாப்பா
கூடி விளையாடு பாப்பா - ஒரு
குழந்தையை வையாதே பாப்பா
ஓடி விளையாடு பாப்பா
                                                                 -பாரதியார்
Courtesy : nurseryrhymesvideo.melbia.com



     RSS of this page

    Author: bhagyalakshmi   Version: 1.1   Last Edited By: bhagyalakshmi   Modified: 17 Nov 2012