Home / Home / Kuzhandhai Paadalgal / காய்கறிகள்

காய்கறிகள்


குட்டைக் குட்டைக் கத்தரிக்காய்
குண்டு குண்டு சுண்டைக்காய்


நெட்டை நெட்டை முருங்கைக்காய்
நீண்டு தொங்கும் புடலங்காய்


வழவழப்பாய் வெண்டைக்காய்
வாட்டமான பூசனிக்காய்


பச்சை பச்சையாய்ப் பாகற்காய்
பட்டை போட்ட பீர்க்கங்காய்


வீட்டில் காய்க்கும் காய்களே
வீதியில் விற்கும் காய்களே.



     RSS of this page

    Written by:   Version:   Edited By:   Modified