Home / ... / Poems / பாரதியார் பாடல்கள் / சுட்டும் விழி சுடர்

சுட்டும் விழி சுடர்


சுட்டும் விழி சுடர் தான் கண்ணமா சூரிய சந்திரரோ

வட்ட கரிய விழி கண்ணமா வான கருமை கொலோ..

பட்டு கரு நீல புடவை பதித்த நல் வைரம்

நட்ட நடு நிசியில் தெரியும் நட்சதிரங்களடி..

சோலை மலர் ஒளியோ உனது சுந்தர புன்னைகைதான்

நீல கடல் அலையே உனது நெஞ்சின் அலைகளடி..

கோலக்  குயில் ஓசை உனது குரலின் இனிமையடி

வாலை குமரியடி கண்ணமா மருவக்காதல் கொண்டேன்..

"சாத்திரம் பேசுகிறாய் கண்ணமா சாத்திரம் எதுக்கடி

ஆத்திரம் கொண்டவர்க்கே கண்ணமா சாத்திரம் உண்டோடி"..

மூத்தவர் சம்மதியேல் வதுவை முறைகள் பின்பு செய்வோம்

காத்திருப்பேனோடி இது பார்..

கன்னத்தில் முத்தம் ஒன்று !..






























 RSS of this page

Written by:   Version:   Edited By:   Modified