Home / Home / Kuzhandhai Paadalgal / தென்னை

தென்னை


எங்கள் வீட்டுத் தென்னையே

இளநீர்க் கொடுக்கும் தென்னையே

பந்தல் போடும் கீற்றையே

பாங்காய் அளிக்கும் தென்னையே



தலையை விரித்து காற்றிலே

சந்தோசமாய் ஆடுவாய்

குலை குலையாய்க் காய்களைக்

கொடுப்பாய் மக்கள் வாழவே




     RSS of this page

    Author: bhagyalakshmi   Version: 1.0   Last Edited By: bhagyalakshmi   Modified: 21 Oct 2012