Home / Home / Poems / வேலன் பாட்டு

வேலன் பாட்டு


மறவேன் மறவே னென்று வேலின்மேல் ஆணையிட்ட

      மன்னரும் மறப்பாரோ - நீல மயிலே!

உருகி உருகி உள்ளம் அவரை நினைவதையும்

      உயிரும் கரைவதையும் - அறியாரோ மயிலே?

அன்பர் வரவு நோக்கி இங்கு நான் காத்திருக்க

      அன்ன நடை பயில்வாயோ - வண்ண மயிலே!

பெம்மன் உன் மேலே வரும் பெருமிதம் தலைக்கேறி

      பாதையை மறந்தாயோ - பேதை மயிலே!

வன்மம் மனதில் கொண்டு வஞ்சம் தீர்க்க நினைத்து

      வழியில் உறங்கினாயோ - வாழி நீ மயிலே!

தன்னிகரில்லாதான் தனயர்பால் மையல் கொண்ட

      மங்கைமீ திரங்காயோ - தங்க மயிலே!

சொன்னாலும் நீ அறியாய் சொந்த அறிவுமில்லாய்

       உன்னை நொந் தாவதென்ன?- வன்கண் மயிலே!

மண்ணும் கரிபரிகள் புவியில் பல இருக்க

        உன்னை ஊர்தியாய் கொண்டார் - தன்னையே நோகவேணும்!




     RSS of this page

    Written by:   Version:   Edited By:   Modified